
ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த ஸ்ரீலீலா
மருத்துவ பின்னணியில் கிரைம் கலந்த ஆக் ஷன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பராசக்தி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீலீலா, தற்போது தனுஷின் ‛ஓம்" படத்தில் நடித்துள்ளார். தவிர அஜித்தின் ‛டேர் டெவில்" படத்திலும் நடிக்கிறார். இப்போது ரஜனி படத்திலும் இணைந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக கைப்பற்றி வருகிறார் ஸ்ரீலீலா.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…