மீண்டும் கியாரா அத்வானியை இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்?
பிப் 14, 2026
Advertisement
மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே "மூத்தான்" என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து "டாக்சிக்" எனும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதை மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் டாக்சிக் படத்திற்கு பிறகு கீது மோகன்தாஸ் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கான பணிகளையும் தற்போது துவங்கி உள்ளாராம். இந்த படம் பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படம் என்பதால் இதில் டாக்சிக் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!