தனுஷ் உடன் மோதும் அதர்வா?
ஜூன் 01, 2025
Advertisement
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் " டி.என்.ஏ . இதில் நிமிஷா சஜயன், காயத்ரி, ரமேஷ் திலக், சேட்டன், விஜி சந்திரசேகர், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் உள்ளது. ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் 20ம் தேதியன்று படத்தை திரையரங்கில் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதே தேதியில் தனுஷின் குபேரா படம் வெளியாகிறது. இதனால் அதர்வா படத்திற்கான தியேட்டர்கள் குறையும் என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!