‛பரிமளா அண்ட் கோ ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு
மே 15, 2026
Advertisement
இயக்குனர் பாண்டியராஜ் தற்போது ஜெயராம், ஊர்வசி ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து "பரிமளா அண்ட் கோ " என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஷ்கின், சஞ்சனா, சாண்டி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ், தமிழ் குமரன் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மீது சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தை வருகின்ற மே 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மிகவும் குறைவான நாட்கள் உள்ளது. அதற்குள் எப்படி படத்தை விளம்பரம் செய்து வெளியிட முடியும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இந்த படத்திலிருந்து "வாட்சா வுடாத" என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதில் சாண்டி, பூர்ணிமா ரவி, சஞ்சனா, அனந்திகா ஆகியோர் நடனமாடி உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!