
ஜெயிலர் பட இசை வெளியீடு எப்போது?
ஜூன் 27, 2023
Advertisement
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். அனிரூத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்ணா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று இப்படம் வெளியாகும். இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் ஜூலை 23ம் தேதி அல்லது ஜூலை 24ம் தேதி அன்று சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!