கார்த்தி 29 படத்தின் பூஜை எப்போது
ஜூலை 09, 2025
Advertisement
சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன. இதையடுத்து ‛டாணாக்காரன்" படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான செட் அமைக்கும் பணி அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை, ஜூலை 10ம் தேதியன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…