‛கேப்டன் மில்லர் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது
செப் 13, 2022
Advertisement
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பில் அடுத்து, ‛நானே வருவேன்" படம் வெளியாக உள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ள இந்த படம் இம்மாதம் ரிலீஸாக உள்ளது. அதைத்தொடர்ந்து வாத்தி படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பின் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‛கேப்டன் மில்லர்" படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிப்பார் என தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷின் ‛நானே வருவேன்" படம் இறுதிக்கட்டத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்தமாதம் துவங்க உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை பிரதேசம் மற்றும் காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!