ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த படமாக இருக்கும் - ராஜமவுலி வெளியிட் அப்டேட்
செப் 13, 2022
Advertisement
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி அடுத்தப்படியாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. தற்போது மகேஷ்பாபு இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகே இந்த படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் டொரண்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலி பங்கேற்றுள்ளார். அப்போது தனது அடுத்தப்படம் பற்றி அவர் பேசும்போது, ‛‛மகேஷ்பாபு உடன் எனது அடுத்தபடம் உருவாகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான படங்கள் பாணியில் ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த இந்திய படமாக இருக்கும்"" என்றார்.
இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!