
ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் 46வது படம்
நவ 10, 2022
Advertisement
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஹீரோ- வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உட்பட சில படங்களை இயக்கிய பொன் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் 46 வது படமான இப்படத்திற்கு விருச்சன் என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கிரித்திவாஸ் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதி கட்டப் பணிகளும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் இரண்டாம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் இப்படத்திற்கான பிரமோசன் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!