
நஷ்டத்திலிருந்து தப்பித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "கருப்பு" படத்தின் வசூலை மனதில் வைத்து இந்தப் படத்திற்கு அதிக விலையை நிர்ணயம் செய்தார்கள். இப்படத்தின் வியாபாரம் மொத்தமாக 90 கோடி வரை நடந்ததாகத் தகவல் வெளியானது. அவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டும் என்றால் படத்தின் மொத்த வசூல் 200 கோடியைக் கடக்க வேண்டும் என்றார்கள். படம் 240 கோடியைக் கடந்துவிட்டது.
அதனால், படத்திற்கு "பிரேக் ஈவன்" கிடைத்து தற்போது லாபத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் "கருப்பு" படத்தின் வசூலை இந்தப் படம் முறியடிக்க வாய்ப்பில்லை என்பதையும் சொல்கிறார்கள். அதிகபட்சமாக 250 கோடி வசூலிக்கலாம் என்கிறார்கள்.
இருப்பினும் இந்த ஆண்டில் மொத்தமாக 600 கோடி வசூலைக் கொடுத்த நாயகனாக தற்போது வரை முதலிடத்தில் இருக்கிறார் சூர்யா.



















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்குப்பை படம். உட்காரமுடியவில்லை .
இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. தெலுங்கு பட கதை இங்கு எடுபடாது. கதை சீராக இல்லை, எங்கு எங்கோ செல்கிறது.