
‛மார்க் ஆண்டனி படத்தில் மூன்று தோற்றத்தில் விஷால்
ஆக 29, 2023
Advertisement
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் படங்களையும், வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று தனது 46வது பிறந்தநாளை விஷால் கொண்டாடுகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "மார்க் ஆண்டனி" படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து விஷால் இரண்டு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விஷால் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இதுதொடர்பாக புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!