துணிவு படத்தை அடுத்து தனுஷை இயக்கும் வினோத்
டிச 24, 2022
Advertisement
நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் துணிவு படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இருக்க இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வினோத். அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!