ஒரு கோடி பார்வை கடந்த விக்ரம் முதல் பார்வை வீடியோ
நவ 08, 2021
"மாஸ்டர்" படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் "விக்ரம்". கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வீடியோ ஒன்றை நேற்று முன் தினம் யு டியூபில் வெளியிட்டார்கள். ஒரே ஒரு காட்சியின் சிறு வீடியோவாக வெளியான இந்த முதல் பார்வைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மூத்த ஹீரோவான கமல்ஹாசன் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இரண்டு நாட்களில் இந்த டீசர் 10 மில்லியன், அதாவது ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் யு டியூப் டிரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.
கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் யு டியூபில் வெளியானது. அந்த வீடியோ 27 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!