அனிருத் இடத்தில் சந்தோஷ் நாராயணன், ஹாட்ரிக் மாற்றம்
மார் 11, 2021
Advertisement
தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் அனிருத், சந்தோஷ் நாராயணன் இருவருமே உள்ளனர். அனிருத் சில பல பெரிய ஹீரோக்களின் படங்களைக் கைப்பற்றுவதில் வல்லவர் என்கிறார்கள்.
ஆனால், சந்தோஷ் நாராயணனுக்கு சில குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர். இருப்பினும் ரஜினியை வைத்து "பேட்ட" படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததும் தன்னுடன் நான்கு படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய சந்தோஷ் நாராயணனுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் அனிருத்திற்கு வழங்கினார் கார்த்திக் சுப்பராஜ்.
அதற்குப் பின் மீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் "ஜகமே தந்திரம்" படத்தில் இணைந்தார். அப்படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட்டாக்கிக் கொடுத்துள்ளார் சந்தோஷ். இந்நிலையில் கார்த்திக் அடுத்து விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள விக்ரமின் 60வது படத்திற்கு மீண்டும் அனிருத்துடன் இணைந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, நேற்று அனிருத்திற்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என அறிவித்தார்கள்.
வேறு ஒரு இசையமைப்பாளரின் இடத்தில் பணிபுரிய வேண்டும் என்றாலும் எந்த ஈகோவும் பார்க்காமல் வந்துள்ள சந்தோஷ் நாராயணனுக்கு பெரிய மனதுதான் என்கிறார்கள். இப்படி அனிருத்தை மாற்றும் படங்களில் சந்தோஷ் நாராயணன் இடம் பெறுவது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு "கொடி, காஷ்மோரா" ஆகிய படங்களுக்கும் இப்படியேதான் நடந்தது.
"விக்ரம் 60" படத்திற்காக கேட்ட நாட்களுக்குள் அனிருத் பாடல்களைக் கொடுக்கவில்லை, அதனால்தான் மாற்றம் என கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டில்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!