மம்முட்டியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
நவ 04, 2022
Advertisement
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகும் "மைக்கேல்" படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை "காக்காமுட்டை", குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனரான மணிகண்டன் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேலும் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல்முறையாக மம்முட்டியும், விஜய் சேதுபதியும் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிடி தளத்திற்காக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!