
சேத்துமான் பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஜயகுமார்
சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் தமிழின் புதிய படம் உருவாக இருக்கிறது . இப்படத்தில் "உறியடி" பட பிரபலம் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…