பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதே பகுதியில் அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா இணைந்து நடித்து வரும், மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவி படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி ஆகியோர் சென்று அவர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இரண்டு படகுழுவினரும் நீண்ட நேரம் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!