
தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்
அவர் அளித்துள்ள பேட்டியில், அஜித் நடிப்பில் நான் இயக்கிய முதல் படமான தீனா படத்திற்கு பிறகு இந்த மதராஸி படத்தை இயக்கும்போதுதான் பழனி முருகனுக்கு வேண்டுதல் செய்திருந்தேன். அதோடு, தீனா படத்துக்கு பிறகு மொட்டை போடவில்லை. என்றாலும் பழனி கோவிலுக்கு சென்று வருவேன். மதராஸி படத்திற்கு பிறகு தலையில் மொட்டை போட்டு உள்ளேன். காரணம் இந்த படமும் எனக்கு முதல் படம் போலதான் என்று கூறியுள்ளார் முருகதாஸ்.
முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் இயக்கிய தர்பார் படம் 2020ம் ஆண்டில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில், அதையடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் இயக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிக்கந்தர் படமும் தோல்வியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் தான் மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!