
விஜய் சேதுபதியின் பத்தா : அக்., 1ல் ரிலீஸ்
இதுநாள் வரை படத்தின் பெயரை அறிவிக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இப்போது ‛பத்தா" என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரெட்ரோ லுக்கில் புகைப்பிடித்தபடி விஜய் சேதுபதி விண்டேஜ் லுக்கில் உள்ளார்.
அதென்ன படத்திற்கு பத்தா என பெயர். பத்தா என்றால் வட்டார வழக்கில் நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஒருவருடைய இருப்பிடம், முகவரி, பின்னணி அல்லது ஒரு விஷயத்தைப் பற்றிய துப்பு, தடயம் மற்றும் ஆதாரத்தை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. சூழலுக்கு தகுந்தபடி அர்த்தம் மாறும். அந்தவகையில் இந்த பத்தா எந்த மாதிரியான சூழலை பேசப்போகிறது என போக போக தெரியும்.
தற்போது படப்பிடப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!