
அனிருத்தை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா
மே 17, 2025
Advertisement
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஜூலை மாதம் திரைக்கு வருகிற படம் "கிங்டம்". நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார், கவுதம் தின்னூரி இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்திற்கான புரொமோசன் நிகழ்ச்சிக்காக தமிழில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, " அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போது அனிருத் பாட்டு எனக்குத்தான் வந்துள்ளது. ஒரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் போயிருந்தேன். அப்போ அந்த மெஷினுக்குள்ள என்ன அனுப்பிட்டாங்க. ஆனா நான் அனிருத் பாட்டு போடுங்கன்னு கேட்டு மெஷினுக்குள்ள வைப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ நானும் அனியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்." என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!