
கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‛கொலை டிரைலர்
ஆக 17, 2022
Advertisement
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படம் கொலை. பாலாஜி குமார் இயக்கி உள்ள இந்த படத்திற்கு கிரீஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். ஒரு கொலை சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கொலை படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் மர்மமான முறையில் நடக்கும் ஒரு கொலையின் பின்னணியை கண்டுபிடிக்கும் துப்பறிவாளரான விஜய் ஆண்டனி நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!