
இந்தியன் 2 படத்திற்கான அரங்கு வேலைகள் ஆரம்பம்
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் கமல்ஹாசன் "பிக் பாஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிக்கலாம் எனத் தெரிகிறது. அதனால், வேறு ஊர்களில் படப்பிடிப்பை வைத்தால் கமல்ஹாசன் வந்து போக சிக்கலாக இருக்கும் என சென்னையிலேயே அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!