டி ராஜேந்தர் வசனத்திற்கு வித்யா பாலன் ரீல்ஸ்
ஏப் 06, 2024
Advertisement
தமிழ் சினிமாவின் அதிரடி கலைஞர் எனப் பெயர் எடுத்தவர் டி ராஜேந்தர். இயக்கம், இசை, நடிப்பு என அவரது பயணம் மகத்தானது. ஆனாலும், இன்றைய இளம் தலைமுறை சினிமா ரசிகர்கள் மத்தியில் அவர் ஒரு "டிரோல் மெட்டீரியல்" ஆகவே பார்க்கப்படுகிறார். அவரைப் போன்று அத்தனை சூப்பர் ஹிட் வசூல் படங்களைக் கொடுத்தவரை வைத்து இப்போது பலரும் ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை வித்யா பாலனும், டி ராஜேந்தர் வசனம் ஒன்றை வைத்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும், பாலிவுட்டின் மேக்கப் கலைஞரான ஹர்ஷ்ஜரிவாலாவும் இணைந்து அந்த வீடியோவில் நடனமாடி இருக்கிறார்கள். சில தமிழ் நடிகைகளும் அந்த ரீல்ஸ் வீடியோவிற்கு லைக் போட்டிருக்கிறார்கள்.
“எனக்குள் இருக்கும் கட்டுப்பாட்டுக் குழப்பம்” என அந்த வீடியோ பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வித்யாபாலன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!