
ஏப்ரல் 28 முதல் விடுதலை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ஏப் 19, 2022
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் விடுதலை. விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஜிவி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விஜய் சேதுபதியின் கால்சீட் காரணமாக தாமதமாக வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 28ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் திண்டுக்கல்லில் போடப்பட்டுள்ள கிராமத்து செட்டுகளில் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!