கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் விடுதலை 2 டைரக்டர்ஸ் கட்
ஜூன் 08, 2025
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவான "விடுதலை 2" படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. அதற்கடுத்து ஓடிடி தளத்தில் தமிழ், மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
படம் தியேட்டர்களில் வெளியான போது அதன் நீளம் 2 மணி நேரம் 46 நிமிடங்களாக இருந்தது. தற்போது கூடுதல் காட்சிகளுடன் 21 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் ஓடும் வரையில் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகத்திற்குக் குறைவான வரவேற்பே கிடைத்தது. இரண்டாம் பாகம் சுவாரசியமாக இல்லாமல் இருந்ததாக விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் இன்னும் கூடுதல் காட்சிகளுடன் "டைரக்டர்ஸ் கட்" பதிப்பை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியம்தான். இருந்தாலும் ஓடிடியில் படம் நீளம் என்பதையெல்லாம் ரசிகர்கள் கவனத்தில் கொள்வதில்லை. படம் பிடித்தால் பார்ப்பார்கள், இல்லையென்றால் நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!