ஐஸ்வர்ய லஷ்மி வெப் தொடரில் இணைந்த விதார்த் மற்றும் கலையரசன்
செப் 06, 2024
Advertisement
மலையாள நடிகை ஐஸ்வர்ய லஷ்மி தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர். இப்போது முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சதீஷ் ராஜா தர்மர் இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு "தீவினை போற்று" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 1990 காலகட்டத்தில் நடைபெறும் கதை களத்திற்கான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் பாபு ஆண்டனி ஆகியோர் இணைந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த வெப் தொடரில் இன்னும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் விதார்த் மற்றும் கலையரசன் இருவரும் இணைந்துள்ளனராம். யாலி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடர் சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!