த்ரிஷ்யம்--2 தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷ்
பிப் 20, 2021
Advertisement
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் "த்ரிஷ்யம்". மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படம தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் ஆனது. இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் தற்போது வெளியாகி முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது.
படம் ரிலீஸாவதற்கு முன்பே இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து பேசுவதற்காகவும் லொக்கேசன் தேடுவதற்காகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளாராம் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் தான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறாராம். த்ரிஷ்யம் தெலுங்கு முதல் பாகத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார். தற்போது அதில் ஒரு சின்ன மாற்றமாக இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்க போகிறாராம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!