தனுஷின் ஹிந்திப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிப் 20, 2021
Advertisement
நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படம் ஏப்ரலில் ரிலீஸாகிறது என அறிவிக்கப்பட்டு விட்டது. கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் நடித்துள்ள "ஜகமே தந்திரம்" ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகாமல் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே படம் வரும் ஆக-௬ல் ரிலீசாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள்.
தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்ற இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தப்படத்தில் தனுஷை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமாரும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார் சாரா அலிகான் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!