அண்ணாத்த படப்பிடிப்பு படத்தை பகிர்ந்த வில்லன் நடிகர்
ஆக 24, 2021
Advertisement
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் "அண்ணாத்த". கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டப்பிங் பணிகள் ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் இப்படத்தின் ரஜினி அல்லாத, படப்பிடிப்பு பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. கோல்கட்டா ஹவுரா பிரிட்ஜில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகரும் எழுத்தாளருமான வேல ராம மூர்த்தி, இயக்குநர் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!