வீட்ல விசேஷம்: 15ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது
ஜூலை 13, 2022
Advertisement
பதாய் ஹோ எனும் ஹிந்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தமிழ் ரீமேக் படம் ‛வீட்ல விசேஷம்". இப்படத்தை ஆர்ஜே பாலாஜி என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்திருந்தார். கடந்த மாதம் 11ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 15ம் தேதி வெளியாகிறது.
50 வயதை தாண்டிய குடும்பத் தலைவி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்த குழப்பங்களை கடந்து அந்த குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை. காமெடி, செண்டிமென்ட் கலந்து உருவான படம். தியேட்டர்களில் ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்ற படம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!