வீரமே வாகை சூடும் டீசர் வெளியீடு
டிச 25, 2021
Advertisement
எனிமி படத்தை அடுத்து விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் ‛வீரமே வாகை சூடும்". குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இந்த படம் மூலம் இயக்குனாக களமிறங்கி உள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று(டிச., 28) படத்தின் டீசரை வெளியிட்டனர்.
சாமானியன் ஒருவன் பணம், பலம் படைத்த வில்லன்களை எதிர்கொள்வதே கதையாக அமைந்துள்ளது. டீசர் முழுக்க விஷால் ஆக் ஷனில் அதிரடி காட்டி உள்ளார். இறுதியில் அப்போ சண்டையை நிறுத்த மாட்டியா என கேட்க, அதை என் எதிரி தான் முடிவு பண்ணனும் என விஷால் கூறுவது போன்று டீசர் முடிகிறது. நிச்சயம் அதிரடி ஆக் ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது. வருகிற ஜன., 26ல் குடியரசு தினத்தன்று படத்தை தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!