மீண்டும் சிக்கலில் தெலுங்கு வாரிசு ?
ஜன 07, 2023
Advertisement
தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர் இணைந்த தமிழ்ப் படமான "வாரிசு" படத்தின் தெலுங்கு வெளியீடு தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "துணிவு" படத்தின் தெலுங்கு டப்பிங்கான "தெகிம்பு" படத்திற்குக் கூட ஜனவரி 11 வெளியீடு என விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், "வாரிசு" தெலுங்கு டப்பிங்கான "வாரிசுடு" படத்திற்கு இன்னமும் "சங்கராந்தி" வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்களாம்.
தமிழில் படம் வெளியாகும் ஜனவரி 11ம் தேதியன்றே தெலுங்கு "வாரிசுடு" வெளியாகாது என்று தெரிகிறது. தெலுங்கு டப்பிங் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அதனால்தான் பட வெளியீட்டை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். அப்படி வெளியிட்டால் அது மீண்டும் ஒரு சிக்கலில்தான் போய் முடியும். தமிழில் ஒரு வேளை படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், அது தெலுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், தயாரிப்பாளர் மீது விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். "வாரிசு" படத்தின் தெலுங்கு டிரைலரான "வாரிசுடு" டிரைலர் யு டியுபில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எனவே, தமிழில் படம் வெளியாகும் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் போதே தெலுங்கிலும் வெளியானால்தான் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. படக்குழுவினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!