திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம்
மார் 07, 2021
கதாநாயகி, வில்லி, கேரக்டர் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது பிரபலமாகி உள்ளார் அதோடு, பெண்களுக்கு உதவி செய்யும் சேவ்சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி தனது 36ஆவது பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார் வரலட்சுமி. அதையடுத்து மீடியாக்களை சந்தித்தவர், சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் மீடியாக்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, திருமணம் குறித்த ஒரு கேள்வியும் அவர் முன்பு வைக்கப்பட்டது. மற்ற கேள்விகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதிலளித்த வரலட்சுமி, அந்த கேள்வியை கேட்டதும் செம கோபமாகி விட்டார்.
""பெண்கள் என்றாலே கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா? ஆண்களைப் போன்று எங்களைப் போன்ற பெண்களுக்கும் வாழ்க்கையில் கொள்கைகள் இருக்கக்கூடாதா? எப்போது சந்தித்தாலும் திருமணம் எப்போது? என்று கேட்கும் கேவலமான கேள்வியை இனிமேலும் என்னிடத்தில் கேட்காதீர்கள்"" என்று காட்டமாக பதிலளித்தார் வரலட்சுமி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!