வரலட்சுமி சரத்குமார் முதன் முதலாக இயக்கி, நடித்துள்ள படம் எஸ்.சரஸ்வதி. கடந்த மார்ச் 6ம் தேதி தெலுங்கில் வெளியான இந்த படம் தியேட்டர்களில் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. இந்த நிலையில் இந்த படம் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படம் தெலுங்கில் மட்டுமே வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். வரலட்சுமியுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கிஷோர் ராவ், ரமேஷ், ஜீவா, முரளி சர்மா மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தை தனது தங்கை பூஜா உடன் இணைந்து வரலட்சுமி தயாரித்தார். தமன் இசையமைத்தார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!