
வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் எஸ் சரஸ்வதி தெலுங்கில் மட்டும் ரிலீஸ்
மார் 06, 2026
Advertisement
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழில் "போடா போடி" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும், நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்த பின் அங்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
இந்நிலையில் இயக்குனராகவும் மாறினார். ஆனால், அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை தமிழில் இயக்கவில்லை, தெலுங்கில் இயக்கியுள்ளார். "எஸ் சரஸ்வதி" என்ற அந்தப் படம் இன்று மார்ச் 6ம் தேதி வெளியானது. இப்படத்தை இன்று தெலுங்கில் மட்டும்தான் வெளியிடுகிறார்கள். பின்னர் தமிழில் டப்பிங் செய்து வெளியிடலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தில் வரலட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்களால் நிச்சயம் யூகிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குனர் வரலட்சுமி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!