
சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன்: வனிதா விஜய்குமார் பேட்டி
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, "சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்" என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!