
முதல் முறையாக சமூக வலைத்தள பக்கத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின்
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது புகைப்படத்துடன் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின். இதுவரை 6௦ ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மீரா ஜாஸ்மினை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!