
செப்., 25ல் ‛வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
செப் 23, 2023
Advertisement
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்த படம் "வணங்கான்". சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சூர்யா விலகினார். தற்போது பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி, காலை 10 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் திகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!