மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல்
ஜூன் 10, 2023
Advertisement
சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரித்திர கதையில் உருவாகி வரும் இப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு முன்பே வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடையாததால் சிவா இயக்கத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா.
இந்த நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு இருப்பதால், மீண்டும் வாடிவாசல் படம் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கங்குவா படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தற்போது சூரரைபோற்று படத்தை ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்து வரும் சுதா, அப்படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!