
சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின்
இளன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கவின் இதுவரை 9 நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு "ஸ்டார்" என்று தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக இந்த ஸ்டார் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக இருந்து போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் அந்தப்படம் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. இப்போது அதே படத்தை கவினை வைத்து இயக்குகிறாராம் இளன். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!