வனவாசம் முடிந்து திரும்பி இருக்கிறேன்: வி.பிரியா
ஏப் 20, 2022
Advertisement
நடிகை ரேவதி இயக்கி, தேசிய விருது பெற்ற ‛மித்ரு மை பிரண்ட்" படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம சினிமாவுக்கு அறிமுகமானவர் வி.பிரியா. பின்னர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கண்ட நாள் முதல் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ‛கண்ணாமூச்சி ஏனடா" என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தம் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார்.
இந்த தொடரின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது: வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறேன். கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜு சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இந்த ஒரிஜினல் சீரீஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார் பிரியா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!