மார்ச் 26ல் ‛உஸ்தாத் பகத்சிங் ரிலீஸ்
பிப் 05, 2026
Advertisement
தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் "ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்" ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தது.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு "ஹரிஹர வீர மல்லு", "ஓஜி","உஸ்தாத் பகத்சிங்" ஆகிய பட பணிகளை முடித்து தந்தார். இவற்றில் ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
உஸ்தாத் பகத் சிங் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படம் வருகிற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!