
கமலின் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டிய உதயநிதி
வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினரை வாழ்த்தி படம் குறித்து பதிவிட்டுள்ளார். "விக்ரம் திரைப்படம் அருமையாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. இந்தப் படத்தைக் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பஹத் மற்றும் மொத்த படக்குழுவினருக்கு நன்றி. நிச்சயம் பிளாக்பஸ்டர்!" என்று தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!