தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று
ஜூலை 26, 2024
Advertisement
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "தங்கலான்". ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்க வயல் சுரங்கம் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதை யொட்டி இப்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதில் சில வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!