ஆகஸ்ட் 14ல் இரண்டே இரண்டு படங்கள் ரிலீஸ்
ஆக 10, 2026
Advertisement
2026ம் ஆண்டின் சுதந்திர தின நாள் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று வருகிறது. ஒவ்வொரு வருடத்திலும் புதிய படங்கள் வெளியாகும் முக்கிய நாட்களில் இந்த நாளும் ஒரு நாளாக இருக்கிறது.
இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டே இரண்டு படங்கள்தான் வெளியாக உள்ளது. சூர்யா நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" மற்றும் விஷால் இயக்கி நடித்துள்ள "மகுடம்" ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் சூர்யா நடித்து வெளியாக உள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு சூர்யா நடித்து மே 15ல் வெளியான "கருப்பு" திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அதனால், "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
விஷால் நடித்து கடந்த வருடப் பொங்கலுக்கு வெளியான "மத கஜ ராஜா" வெற்றிப் படமாக அமைந்தது. சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு அப்படம் வெளியாகி ஆச்சரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து விஷால் நடித்துள்ள "மகுடம்" வெளியாகிறது. ரவி அரசு இயக்க ஆரம்பித்த படம் அதன் பின் ஏதோ ஒரு பிரச்சனையால் விஷால் இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படம். அதனால், இந்தப் படம் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த இரண்டு படங்கள்தான் இந்த வார ரிலீஸ் என்றாலும் வரும் வாரங்களில் மீண்டும் வழக்கம் போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!