
நலமுடன் உள்ளேன் - டிபி.கஜேந்திரன்
சமீபகாலமாக உடல்நிலையை காரணம் காட்டி சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறலால் பாதித்த இவர் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று லேசாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே வீடு திரும்பி உள்ள கஜேந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நான் நலமாக இருக்கிறேன். உங்களுடைய அன்புக்கு நன்றி. தொடர்ந்து பட வாய்ப்புகள் வரணும்"" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!