
லண்டனில் படமாகும் டாக்சிக்
ஜூன் 15, 2024
Advertisement
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் புகழ் நடிகர் யஷ் தனது 19வது படமாக "டாக்சிக்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்து வருகின்றனர். தற்போது யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த படப்பிடிப்பை 200 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் 150 நாட்கள் பெரும்பாலான படப்பிடிப்பை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…