
டாக்சிக் டிரைலர் தேதி அறிவிப்பு
இந்நிலையில் யஷின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து, படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பெங்களூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் படக்குழுவினர் முன்னிலையில் இந்த டிரைலர் வெளியிடப்படவுள்ளது.
யஷ் கதையாசிரியராகவும், கீது மோகன்தாஸ் இயக்குநராகவும் பணியாற்றும் இந்த டாக்சிக் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் ஆக்ஷன் கதைக் களத்தைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!