
கிரேட் எஸ்கேப் ஆன டாக்சிக்
"கேஜிஎப் 2" படத்தின் மூலம் 1000 கோடி வசூலை கன்னட சினிமாவிற்கு முதன்முதலில் அமைத்துக் கொடுத்த யஷ் நடித்த "டாக்சிக்" படமும் அதே மார்ச் 19ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென படத்தின் வெளியீட்டை ஜூன் 4ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
"துரந்தர் தி ரிவெஞ்ச்" படத்தின் வரவேற்பு தங்கள் படத்திற்கு பாகதமாக அமையும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். அது போலவே தற்போது நடந்துள்ளது. மாபெரும் வரவேற்புடன் அப்படம் தென்னிந்திய மாநிலங்களிலும் ஓடி வருகிறது. அதனால், "டாக்சிக்" படம் "கிரேட் எஸ்கேப்" ஆகிவிட்டதாக கன்னடத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம் அதை சரியாக கணிக்காத "உஸ்தாத் பகத் சிங்" தயாரிப்பாளர்கள் அப்படத்தை மார்ச் 19ல் வெளியிட்டனர். தற்போது "துரந்தர்" வரவேற்பில் இப்படம் சிக்கித் தவித்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!