டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மார் 22, 2025
Advertisement
கேஜிஎப் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகர் யஷ். தற்போது மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தனது 19வது படமாக "டாக்சிக்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்தாண்டு, 2026 மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!